திமுக., வில் இணைந்த மாற்றுக்கட்சியினர்

கிருஷ்ணகிரியில் பல்வேறு மாற்றுக் கட்சியில் இருந்து விலகிய 50 பேர் திமுகவில் இணைந்தனர்

கிருஷ்ணகிரியில் பல்வேறு மாற்றுக் கட்சியில் இருந்து விலகிய 50 பேர் திமுகவில் இணைந்தனர்.

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, கிருஷ்ணகிரி மேற்கு ஒன்றியம், மாநில பொது குழு உறுப்பினர். அஸ்லம் ரஹ்மான், ஷரிப் ஏற்பாட்டில் பெத்ததாளப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன், அம்சவள்ளி ஆகியோர் முன்னிலையில், கொண்டேப்பள்ளி ஊராட்சி அதிமுக கிளை செயலாளர் மாணிக்கம், மற்றும் பெத்ததாளப்பள்ளி ஊராட்சியில் அதிமுக,பாமக, ஆகிய கட்சியை சார்ந்த 50 பேர் கொண்ட உறுப்பினர்கள் பல்வேறு கட்சியிலிருந்து விலகி திமுக கிருஷ்ணகிரி கிழக்குமாவட்ட செயலாளரும், பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான மதியழகன், MLA அவர்கள் தலைமையில் திராவிட முன்னேற்ற கழகத்தில் கழக பணியாற்றிட கழக வேட்டி, சால்வை அணிவித்து இணைத்து கொண்டனர், உடன் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story