போலியான செயலிகளில் முதலீடு செய்து ஏமாற வேண்டாம் - எஸ்பி எச்சரிக்கை

போலியான செயலிகளில் முதலீடு செய்து ஏமாற வேண்டாம் - எஸ்பி எச்சரிக்கை

எஸ்பி ஸ்டீபன் ஜோசப் பாதம்

இணைய வழி மோசடி அதிகரித்துள்ள நிலையில் போலியான செயலிகளில் முதலீடு செய்ய வேண்டாம் தருமபுரி எஸ்பி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜோசப் பாதம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தொழில்நுட்ப வளர்ச்சியாலும் செல்போன்கள் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் அதிகரித்துள்ளதாலும் நாளுக்கு நாள் இணைய வழி மோசடிகள் அதிகரித்துக் கொண்டு வருகிறது. இது தொடர்பாக தர்மபுரி மாவட்டத்தில் சைபர் கிரைம் போலீசார் பல்வேறு வழிமுறைகளில் மக்களை சென்றடையும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஏற்படுத்தி வருகின்றனர். இருப்பினும் மோசடி நபர்களின் ஆசை வார்த்தைகளை Whatsapp & Telegram- Link- Click- போலியான இணையதளம் மற்றும் செயலிகளில் முதலீடு செய்து அதிக லாபம் பெறலாம் என ஆசைப்பட்டு பொதுமக்கள் பணத்தை இழந்து வருவது சமீப காலமாக அதிகரித்துக் கொண்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக தற்போது தர்மபுரி மாவட்டத்தில் hp என்ற போலியான முதலீட்டு செயலி ஒன்று பொதுமக்களிடையே அதிக அளவில் பகிரப்பட்டு அதில் முதலீடு செய்து பலர் பணத்தை இழந்துள்ளனர். hp செயலி மூலம் பணத்தை இழந்த சிலர் தர்மபுரி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரை பெற்ற சைபர் கிரைம் போலீசார், மாவட்ட தலைமையிடத்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.N.பாலசுப்பிரமணியன் அவர்களின் வழிகாட்டுதலின் படி, மோசடி கும்பலை கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ள தீவிர புலன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது தர்மபுரி மாவட்டத்தில் பரவலாக பரவியுள்ள இந்த போலி hp செயலி மூலமாக பொதுமக்கள் முதலீடு செய்து பணத்தை இழக்க வேண்டாம் என தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் அவர்கள் தெரிவித்தார். இச்செயலியில் ஆரம்பக் கட்டத்தில் சில சிறிய முதலீட்டிற்கு லாபம் கிடைக்கச் செய்து பெரிய அளவில் முதலீடு செய்ய வைத்து ஏமாற்றுவார்கள் எனவும் தெரிவித்தார். ஆகவே இது போன்ற போலியான முதலீட்டு செயலிகளை நம்ப வேண்டாம் எனவும் பாதிக்கப்பட்டவர்கள் உடனடி பரிவர்த்தனைகளுக்கு 1930 என்ற சைபர் கிரைம் உதவி எண்ணை தொடர்பு கொண்டு தங்களது புகாரினை தெரிவிக்கலாம் எனவும் அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்திலும் புகரை பதிவு செய்யலாம் எனவும் தெரிவித்தார்.

Tags

Read MoreRead Less
Next Story