செல்போன்களுக்கு எச்சரிக்கை மணி - பயம் வேண்டாம் : - ஆட்சியர் உமா

செல்போன்களுக்கு எச்சரிக்கை மணி - பயம் வேண்டாம் : -  ஆட்சியர் உமா

மாவட்ட ஆட்சியர்  ச.உமா 

மாதிரி சோதனை பேரிடர் கால எச்சரிக்கை செய்தி அனுப்பப்பட உள்ளதால் பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் செயல்படுத்தப்படும் அகில இந்திய அவசர எச்சரிக்கை அமைப்பின் செயல்பாட்டை சரிபார்க்க இந்திய அரசின் தொலைத் தொடர்புத் துறையால் செல் ஒளிபரப்பு அமைப்பு மூலம் மாதிரி சோதனை பேரிடர் கால எச்சரிக்கை செய்தி இன்று 20.10.2023 அன்று பொதுமக்களின் செல்பேசிகளுக்கு அனுப்பப்பட உள்ளது. இந்த பேரிடர் கால எச்சரிக்கை தொடர்பாக பொதுமக்கள் யாரும் பதற்றமடைய வேண்டாம் என்றும், இதற்கு எந்த எதிர்வினையும், ரிப்ளையும் செய்ய வேண்டாம் எனவும் பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.மேலும், பொதுமக்களின் பாதுகாப்பை அதிகரிப்பதும், அவசர காலங்களில் உரிய நேரத்தில் எச்சரிக்கைகளை வழங்குவதற்காகவும் இச்சோதனை நடைபெறுகிறது என நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் ச.உமா தெரிவித்துள்ளார்.


Tags

Next Story