தாழ்த்தப்பட்டவர்களுக்கு முடி திருத்தம் செய்யக்கூடாது : வீடியோ வைரல்

தாழ்த்தப்பட்டவர்களுக்கு முடி திருத்தம் செய்யக்கூடாது : வீடியோ வைரல்

அடைக்கப்பட்ட சலூன்

தாழ்த்தப்பட்டவர்களுக்கு முடி திருத்தம் செய்யக்கூடாது ஊர் கட்டுப்பாடு என் முடி திருத்தம் செய்ய வந்தவரிடம் சலூன் கடைக்காரர் பேசும் வீடியோ வைரலான நிலையில் சலூன் உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த புதுச்சத்திரம் அருகே உள்ள திருமலைபட்டி காமராஜர் காலணியை சேர்ந்தவர் அருண்பாண்டியன் கடந்த 17 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை திருமலைபட்டியில் உள்ள முத்து என்பார் சலூன் கடைக்கு தனது இருமகன்களை முடி திருத்தம் செய்ய அழைத்து சென்று உள்ளார்.

ஆனால் சலூன் கடையின் உரிமையாளர் முத்து(37)தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த உங்களுக்கு இங்கு முடி திருத்தம் செய்யக்கூடாது என ஊர் கட்டுப்பாடு இருப்பதாகவும், தான் முடி திருத்தம் செய்தால் இங்கு கடையை நடத்த முடியாது என்றும் கூறியுள்ளார். மேலும் 18 பட்டி மக்கள் கூறியதாகவும்,

யாரிடம் வேண்டுமானாலும் சொல்லுங்கள் பஞ்சாயத்து பார்த்துக் கொள்வதாக கூறினார்.இதனால் அதிர்ச்சி அடைந்த அருண்பாண்டியன் முடித்திருத்தம் செய்யச்சொல்லி சலூன் கடை உரிமையாளரிடம் வலியுறுத்தியும் அவர் இறுதி வரை அருண்பாண்டியனின் குழந்தைகளுக்கு முடித்திருத்தம் செய்யவில்லை. இந்த நிலையில் அருண்பாண்டியன் தனது மகனுடன் சலூன் கடைக்காரிடம் முடித்திருத்தம் செய்யச்சொல்லி வலியுறுத்தும் வீடியோ அடிப்படையில் அருண்பாண்டி

புதுச்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே புகாரை விசாரணை மேற்கொண்டிருந்த காவல் ஆய்வாளர் கோமதி சலூன் கடை உரிமையாளர் சிட்டு(எ) முத்துவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story