வரதட்சணை தடை சட்ட விழிப்புபேரணி: மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைப்பு
விழிப்புணர்வு பேரணியை தொடக்கி வைத்த ஆட்சியர்
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் சார்பில் வரதட்சனை தடுப்பு சட்டம் குறித்து விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர் பாண்டியன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்த பேரணி மாவட்ட சமூக நல அலுவலர் கே விஜயலட்சுமி தலைமையில் நடைபெற்றது இந்த பேரணியில் கல்லூரி மாணவர்கள் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் அனைத்து மகளிர் குழுக்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டு கையில் பதாகைகள் ஏந்தி கோஷங்கள் எழுப்பி பேரணியாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து பிரதான சாலை வழியாக நகர காவல் நிலையம் வழியாக பேரணியாக சென்று மீண்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து அடைந்தது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி மற்றும் துறையை சேர்ந்த அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.