மனைவி பிரிந்து சென்ற இயக்கத்தில் ஓட்டுநர் தற்கொலை
தற்கொலை
திருவிதாங்கோட்டில் மனைவி பிரிந்து சென்ற ஏக்கத்தில் ஓட்டுநர் தீக்குளித்து தற்கொலை.
திருவிதாங்கோடு கைதகுழி ஊரை சேர்ந்தவர் டிரைவர் விஜின். இவரது மனைவி அஜீ.குடி நீர்வாரியத்தில் வேலை செய்கிறார். இந்த தம்பதி இடையே கருத்து வேறுபாடு காரணமாக அஜீ தனது இரண்டு குழந்தைகளுடன் தாயார் வீட்டுக்கு சென்றுவிட்டார்.நேற்று காலையில் விஜின் உடல் கரிந்து தோட்டத்தில் இறந்து கிடந்ததை பார்த்து அவரது தாயார் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். புகாரின் பேரில் தக்கலை இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் விசாரணை நடத் தினார். இதில் மனைவி பிரிந்த சோகத்தில் விஜின் மண்எண்ணெய்யை உடலில் ஊற்றி தீ வைத் திருக்கலாம் என்று தெரிய வந்தது. மேலும் வழக்கு பதிந்து விசாரிக்கிறார்.
Next Story