கல்வி கட்டணம் கட்ட முடியாததால் கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி

கல்வி கட்டணம் கட்ட முடியாததால்  கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி

பைல் படம்

சேலம் தாதகாப்பட்டியில் கல்வி கட்டணம் கட்ட முடியாததால் கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி செய்தார்.
சேலம் தாதகாப்பட்டி போலீஸ்காரர் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் மோகன்குமார். இவரது மகள் சுருதி (19). இவர் சேலத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம்., சி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று சாணி பவுடரை குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார். இதை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது . இது குறித்து அன்னதானப்பட்டி போலீசார் விசாரணை நடத்திய போது, கல்வி கட்டணம் ரூ. 8 ஆயிரம் கட்ட முடியாமல் மனம் உடைந்த மாணவி சாணி பவுடர் குடித்து தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்தது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags

Next Story