தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தில் ஈஸ்டர் சிறப்பு பிரார்த்தனை

தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தில் ஈஸ்டர் சிறப்பு பிரார்த்தனை
X
ஈஸ்டர் திருபலி
ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு உலக புகழ்பெற்ற தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தில் சிறப்பு பிரார்த்தனையில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.

சிலுவையில் அறையப்பட்ட இயேசு பிரான் மூன்றாவது நாள் உயிர்த்தெழுந்த நிகழ்வு ஈஸ்டர் பண்டிகையாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை கொண்டாட கிறிஸ்தவர்கள் ஆண்டு தோறும் 40 நாள் தவக்காலம் அனுசரித்து வருகின்றனர். ஈஸ்டர் சிலுவையில் அறையப்பட்டு மூன்றாவது நாள் உயிர்த்தெழும் நிகழ்ச்சியை ஈஸ்டர் பண்டிகை யாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடியில் உள்ள உலக புகழ்பெற்ற பனிமய மாதா பேராலயம் மற்றும் திரு இருதய ஆண்டவர் ஆலயத்தில் இயேசுபிரான் உயிர்த்தெழும் நிகழ்வு தத்துரூபமாக செய்து காண்பிக்கப்பட்டது. ஈஸ்டர் பண்டிகை திருப்பலி பணிமயமாதா கோவில் பங்குத்தந்தை குமார் ராஜா தலைமையிலும் இருதய ஆண்டவர் கோவிலில் ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமையிலும் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

இதில் ஏராளமான கிறிஸ்தவ மக்கள் மெழுகுவர்த்தி ஏந்தியபடி உலக அமைதி வேண்டி சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். லூர்தம்மாள்புரம் புனித லூர்து அன்னை ஆலயம், இன்னாசியர் ஆலயம், ஆரோக்கியபுரம் ஆரோக்கியநாதர் ஆலயம் மற்றும் கோவில்பட்டி, திருச்செந்தூர், விளாத்திகுளம், எட்டயபுரம், சாத்தான்குளம், நாசரேத் உள்பட தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

Tags

Next Story