மாமூல் விவகாரத்தில் போலீஸ் ஏட்டு சஸ்பெண்ட்
மனுதாக்கல்
முன் ஜாமீன் கேட்டு மனுதாக்கல்
சேலம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவில் பணியாற்றிய ஏட்டு பிரபாவதி, ரேசன் அரிசி கடத்தும் தங்கராஜ் என்பவரிடம் 10ஆயிரம் மாமூல் கேட்டதாகவும், இதையடுத்து புரோக்கர் குமரேசன் பணம் பெற்ற போது லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். ஏட்டு பிரபாவதியும் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார். இன்னொரு ஏட்டான மணி, ஏற்கனவே ரூ.10 ஆயிரம் வாங்கியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அவர் மீதும் வழக்கு பதிவானது. அவர் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகிறார். இதற்கிடையில் ஏட்டுக்கள் பிரபாவதி, மணி ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்நிலையில் ஏட்டு பிரபாவதி தாக்கல் செய்த ஜாமீன் மனு தள்ளுபடியான நிலையில் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். அதேபோல ஏட்டு மணி முன்ஜாமீன் கேட்டு தாக்கல் செய்துள்ள மனு வருகிற 21ம்தேதி விசாரணைக்கு வருகிறது. இதற்கிடையில் அவரை கைது செய்ய விஜிலென்ஸ் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
Next Story