கடையநல்லூரில் தேர்தல் விழிப்புணர்வு முகாம்
தேர்தல் விழிப்புணர்வு முகாம்
கடையநல்லூரில் தேர்தல் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் கலைமான் நகரில் வசிக்கும் பழங்குடியினருக்கு தேர்தல் விழிப்புணர்வு முகாம் கடையநல்லூர் ஆணையாளர் சுகந்தி தலைமையிலும் மகளிர் திட்ட உதவி திட்ட அலுலவர் பிரபாகர் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. தேர்தல் திருவிழா தேசத்தின் பெருவிழா” என் வாக்கு என் உரிமை”, “என் வாக்கு விற்பனைக்கு அல்ல” "வாக்களிப்பது நமது வாக்களியுங்கள்” "100% "வாக்களிப்பதில் நேர்மையாக பெருமை கொள்வோம், இந்திய ஜனநாயகத்தில் பங்கு பெறுவோம்”போன்ற தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரதிகள் அனைவருக்கும் வழங்கப்பட்டது. அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என கூறப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மகளிர் திட்ட சமுதாய அமைப்பாளர்கள் மனோகரன், இளவரசி, சமுதாய வளபயிற்றுநர் மற்றும் அப்பகுதியில் வசிக்கும் பழங்குடியினர் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மகளிர் திட்ட அலுவலர்கள் மற்றும் கடையநல்லூர் ஊராட்சி அலுவலர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
Next Story