தேர்தல் விழிப்புணர்வு உறுதிமொழி

திருச்செங்கோடு நகராட்சி சார்பில் தேர்தல் விழிப்புணர்வு உறுதிமொழி நிகழ்ச்சி நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சி சார்பில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

நகராட்சி சுகாதார அலுவலர் வெங்கடாசலம் தலைமையில் திருச்செங்கோடு புதிய பேருந்து நிலையம் முன்பாக பொதுமக்களிடையே தேர்தல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 100% வாக்குப்பதிவு கையூட்டு பெறாமல் வாக்களிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை வலியுறுத்தி உறுதிமொழி ஏற்கப்பட்டது.

நமது இலக்கு 100% வாக்குப்பதிவு வாக்கு அளிப்பது நம் அனைவரின் ஜனநாயக கடமை என்றும் 100% நேர்மையாக வாக்களிப்போம் அனைவரும் தவறாமல் வாக்களிப்போம் என்றும் வாக்களிப்பதில் பெருமை கொள்வோம் இந்திய ஜனநாயகத்தில் பங்கு பெறுவோம் என்றும் பணம் வாங்காமல் நேர்மையாக வாக்களிப்போம் என உறுதி கொள்வோம் என்றும் ஜனநாயகத்தின் வலிமையை உங்கள் ஒவ்வொருவரின் ஓட்டிலும் உள்ளது என்றும் எனது வாக்கு எனது உரிமை எனது வாக்கு விற்பனைக்கு அல்ல என்பன போன்ற விழிப்புணர்வு வாசகங்களை பொதுமக்களிடையே வாசித்து துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு விநியோகம் செய்தனர் இந்த நிகழ்ச்சியில் நகராட்சி சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்

Tags

Next Story