மின் ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஒலி முழக்க ஆர்ப்பாட்டம்

மின் ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஒலி முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு பெரம்பலூர் வட்டக் கிளை சார்பில் கோரிக்கை வலியுறுத்தி ஒலி முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.... பெரம்பலூர் நான்கு ரோடு அருகே உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சிஐடியு பெரம்பலூர் வட்டக் கிளை சார்பில், கோரிக்கையை வலியுறுத்தி ஒலி முழக்க ஆர்ப்பாட்டம் டிசம்பர் 1 ஆம் தேதி இன்று காலை நடைபெற்றது.

மின் ஊழியர் மத்திய அமைப்பின் திருச்சி மண்டல செயலாளர் அகஸ்டின் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் வட்டச் செயலாளர் பன்னீர்செல்வம் விளக்க உரையாற்றினார், இந்த ஒலி முழக்க ஆர்ப்பாட்டத்தில் 1.12. 2023 முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வுக்கு பேச்சுவார்த்தை நடத்திட குழு அமைத்து, விரைந்து பேச்சு வார்த்தை நடத்திட வேண்டும், 60 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்,.

ஒப்பந்தப்படி ஏற்படுத்தப்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்பிட வேண்டும் புதிய பதவிகளை அனுமதித்திட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கோசமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மின் ஊழியர் மத்திய அமைப்பின் பெரம்பலூர் மாவட்ட கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் மின்வாரிய தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர் .

Tags

Next Story