திங்கள்நகரில் மின்மீட்டர் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

திங்கள்நகரில் மின்மீட்டர் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
X
மின் மீட்டரில் தீ

குமரி மாவட்டம் திங்கள்நகர் பேரூராட்சி மார்க்கெட் வரி வசூல் செய்வதற்கு பேரூராட்சி நிர்வாகம் சார்பில் வரிவசூல் மையம் மார்க்கெட் நுழைவு சாலையில் உள்ளது. அங்கு உயர்கோபுர மின் விளக்கு, மின் மீட்டர் பெட்டி உள்ளது. வரிவசூல் மைய மின் மீட்டரும், உயர் கோபுர விளக்கிற்கும் உள்ள மின் மீட்டரும் ஒரே இடத்தில் உள்ளது.

நேற்று நள்ளிரவு இந்த மின் மீட்டரில் மின் கசிவு ஏற்பட்டு மீட்டர் திடீரென தீப்பிடித்து எரிந்தது. அப்போது அந்த வழியாக குளச்சல் டி.எஸ்.பி. தங்கராமன் ரோந்து வந்தார். அவர் மின் மீட்டர் தீயில் எரிவதை பார்த்து உடனே திங்கள்நகர் தீயணைப்பு நிலையத்திற்கும், மணவாளக்குறிச்சி இன்ஸ்பெக்டருக்கும் தகவல் தெரிவித்து அங்கு வரவழைத்தார். தீயணைப்பு நிலையத்தினர். மற்றும் மின் வாரிய ஊழியர்கள் சம்பவ இடம் விரைந்து சென்று பரவும் தீயை சுமார் ½ மணி நேரம் போராடி அணைத்தனர்.

Tags

Next Story