மின்சாரம் தாக்கி ஊழியர் படுகாயம்

மின்சாரம் தாக்கி ஊழியர் படுகாயம்

பைல் படம்

கன்னியாகுமரியில் மின்பணியின் போது மின்சாரம் தாக்கி ஊழியர் படுகாயம் அடைந்தார்.

கன்னியாகுமரி மின் பகிர்மான பிரிவு அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மின்மாற்றி மற்றும் உயர் அழுத்த மின்கம்பிகளில் உள்ள பழுதுகளை சரி பார்க்கும் பணி நேற்று நடைபெற்றது. இந்த பணியில் நிரந்தர மற்றும் ஒப்பந்த பணியாளர்களுடன் சில தனியார் எலக்ட்ரீசியன்களும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இதில் கன்னியாகுமரி குண்டல் பகுதியை சேர்ந்த வரதன் (30) என்பவர் கன்னியாகுமரி நான்குவழி சாலை முடியும் சீரோ பாயிண்ட் பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மரில் பராமரிப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி அவர் தூக்கி வீசப்பட்டார். இதில் பலத்த காயம் அடைந்த வரை அக்கம் பக்கத்தினரும் சக ஊழியர்களும் மட்டு ஆம்புலன்ஸ் மூலம் நாகர்கோவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது பற்றி மின்சார வாரியத்துறை உயர் அதிகாரிகளும் போலீசாரும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags

Next Story