திமிரியில் என் மண் ,என் தேசம் நிகழ்ச்சி
நமது இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக உயிர் தியாகம் செய்த வீரர்களை நினைவு கூர்ந்து, அவர்களுக்கு வீர வணக்கம் செலுத்தும் வகையில், ராணிப்பேட்டை மாவட்டம், திமிரி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் எனது மண் எனது தேசம் இயக்கம் நிகழ்ச்சி நேரு யுவகேந்திராவின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் காயத்திரி தலைமையில் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் முன்னதாக பள்ளி மாணவர்களின் பேரணி நடைபெற்றது அதில் மாணவர்கள், கையில் மூவர்ண கொடியை ஏந்தியவாரு அமுத கலச யாத்திரைக்கு வீர வணக்கம் செலுத்தினர். அதனை தொடர்ந்து பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நேரு யுவகேந்திராவின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் காயத்திரி என் மண் என் தேசம் குறித்து மாணவிகளிடையே விரிவாக எடுத்து கூறினார் மேலும் இந்த என் மண் என் தேசம் நிகழ்வானது ஒரே இந்தியா ஒற்றுமையான இந்தியா என்பதை உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது எனவே நமது நாட்டின் தியாகிகளை நாம் நினைவு கூற வேண்டும் என பேசினார். மேலும் திமிரி வட்டார அளவில் சேகரிக்கப்பட்ட மண், அரிசி அமுத கலசத்தில் கலந்து டெல்லிக்கு கொண்டு செல்லும் தன்னார்வலரிடம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் இறுதியாக எனது மண் எனது தேசத்துக்கு உறுதுணையாக இருப்பேன் என மாணவர்கள் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். குறிப்பாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரத்திலும் நிகழ்ச்சி நடத்தி முடிக்கப்பட்டு முழுவதும் மண் சேகரிக்கப்பட்டது. மேலும் டெல்லிக்கு கொண்டு செல்லும் பணி தயார் செய்யப்பட்டு வருகிறது.இந்த நிகழ்ச்சியில், தன்னார்வலர் ஆசீம், அஞ்சல் துறை ஊழியர்கள், பொது மக்கள், மாணவர்கள் என பலர் கலந்துக் கொண்டனர்.