நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும் நிலையில் நிலத்தில் புகுந்து ரகளை

நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும் நிலையில் நிலத்தில் புகுந்து ரகளை

டிராக்டர் மூலம் மண்ணெடுப்பு 

மயிலாடுதுறை அருகே ஆக்கூர் கிராமத்தில் ஒரு குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ள கொடுமை. இறந்த பெற்றோரின் உடலை இடுகாட்டில் புதைப்பதற்கு அனுமதி இல்லை - மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா ஆக்கூர் தெற்கு தெருவில் முனுசாமி மகன் அசோக் என்பவர் வசித்து வருகிறார். அவர் தலைமுறையாக அனுபவித்து வந்த நிலத்தை கிறிஸ்தவ நிறுவனம் அசோக்கிற்கு உழவடை பத்தியம் அளிக்காமல் விற்று விட்டனர். அதை வாங்கிய நபர்கள் தொடர்ந்து இடத்தை கைப்பற்றுவதற்கு முயற்சித்தும் அது இயலாமல் போனதால் அந்த குடும்பத்தை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்து விட்டனர். அசோக்கின் தந்தை இறந்ததற்கும் ஊர் சுடுகாட்டில் இடம் அளிக்கவில்லை தாய் இறந்ததற்கும் ஊர் சுடுகாட்டில் இடம் அளிக்கவில்லை தற்போது ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளனர். அனுபவத்து வரும் இடத்தில் தமக்கு பங்கு வேண்டும் என்று தரங்கம்பாடி உரிமையியல் நீதிமன்றத்தில் அசோக்கின் வழக்கு நடந்து வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அந்த இடத்தை சந்திரமோகன் என்ற நபர் டிராக்டர் மூலம் மண்ணெடுத்து தூர்த்தனர். காவல்துறை மூலம் தடுக்கப்பட்டது. தற்பொழுது மீண்டும் அதே போன்று இரவு நேரத்தில் அந்தப் பகுதியில் உள்ள மரங்களை வெட்டி அப்புறப்படுத்தி அந்த பள்ளத்தை பொக்கிலின் எந்திரம் மூலமும் டிராக்டர் மூலமும் மண்ணைக் கொட்டி தூர்த்தனர் . இந்த பிரச்னை குறித்து செம்பனார் கோயில் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அன்றைய இரவே ஊர் கூடி குடும்பத்தை ஊர்விலக்கம் செய்து வைத்துள்ளது. சந்திரமோகன் தற்போது ஊராட்சி மன்ற தலைவராக இருக்கிறார். இதுகுறித்து சமூக நல வழக்கறிஞர் சங்கமித்ரன் கூறுகையில் தொடர்ந்து ஒரு குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைத்து பல்வேறு இடைஞ்சல் கொடுத்து வருகிறார். ஊர் மக்களை அசோக் குடும்பத்திற்கு எதிராக திசை திருப்பி பகைமையை வளர்த்து விடுகிறார். காவல்துறையினர் இதில் மெத்தனம் காட்டி வருகின்றனர். உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் போராட்டம் நடத்த விடும் என்றும் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story