குமரியில் மீனவரிடம் செல்போன் பணம் பறிப்பு: 4பேர் கைது

குமரியில் மீனவரிடம் செல்போன் பணம் பறிப்பு:  4பேர் கைது
பைல் படம்
குமரியில் மீனவரிடம் செல்போன் பணம் பறித்த 4பேர் கைது செய்யப்பட்டனர்.

கன்னியாகுமரி சுனாமி காலனி பகுதியை சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ் (38). இவர் மீன்பிடித்தொழில் செய்து வருகிறார். நேற்று இவர் கன்னியாகுமரி பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் (23) மற்றும் 18 வயதுக்கு உட்பட்ட மூன்று சிறுவர்கள் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார்.

அவர்கள் நடந்து சென்று கொண்டிருந்த ஆரோக்கியதாசை வழிமறித்து மிரட்டி அவரது கையில் இருந்த செல்போன், வாட்ச் மற்றும் பணத்தை பறித்துக் கொண்டு தப்பி சென்றுள்ளனர். இது குறித்து ஆரோக்கியதாஸ் கன்னியாகுமரி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் இது தொடர்பாக ஆகாஷ் மற்றும் மூன்று சிறுவர்களையும் போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரியில் நடந்த இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story