கள் இறக்கும் விவசாயிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது

கள் இறக்கும் விவசாயிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது

விவசாயிகள் கோரிக்கை

கள் இறக்கி விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 63 பேர் இறந்த நிலையில் இதை கருத்தில் கொண்டாவது பனை தொழிலாளர் மற்றும் உழைக்கும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு கள் இறக்குவதற்கான தடையை நீக்க வேண்டுமென்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

இந்த நிலையில் தென்னை மரங்களில் இருந்து கள் இறக்கி விற்பனை செய்ய அரசு அனுமதிக்க வேண்டுமென வலியுறுத்தி கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் சார்பில் அவ்வமைப்பின் மாநிலத் தலைவர் சண்முகம் தலைமையில் கோவை சூலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

பின்னர் கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் சண்முகம் செய்தியாளர்களிடம் பேசுகையில் கள்ளக்குறிச்சி சாராய மரணங்களை தொடர்ந்து விவசாயிகள் கள் இறக்குவதற்கு கெடுபிடிகள் அதிகரித்து வருகிறது எனவும் கள் இறக்கும் விவசாயிகள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கள்ளச்சாராயம் போன்ற சட்டவிரோத மது விற்பனையை தடுப்பதற்கு தென்னை மரங்களில் இருந்து கள் இறக்கி விற்பனை செய்திட தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்றார்.

பூரண மதுவிலக்கை வலியுறுத்திய மகாத்மா காந்தி சுத்தமான கள் ஆரோக்கியமானது என தெரிவித்திருக்கிறார். லிட்டர் 50 ரூபாய் விலையில் கள் விற்பனை செய்யப்பட்டால் மது அருந்துவோர் திருப்தி அடைவார்கள் எனவும் மது குடித்தால் உடலுக்கும் நாட்டுக்கும் தீங்கு என பாட்டில்களில் எழுதி வைத்து விற்பனை செய்யப்படுகிறது.

இது போன்று கள் விஷம் என்றும் போதைப் பொருள் என்றும் நிரூபிக்க முடியுமா? என கேள்வி எழுப்பியவர் அப்படி நிரூபித்தால் 10 கோடி ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என விவசாயிகள் அறிவித்தும் இப்போது வரை யாரும் முன் வரவில்லை என்றார்.

Tags

Next Story