மரக்கடையில் தீ விபத்து - ரூ.20 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்

வாணியம்பாடியில் குடியிருப்பு பகுதியில் செயல்பட்டு வந்த மரக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.20 லட்சம் மதிப்பிலான மரச்சாமான்கள் மற்றும் இயந்திரங்கள் தீயில் எரிந்து சேதமானது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி புதூர் அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் பிரான்சிஸ் இவர் அதே பகுதியில் மூன்று அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் நிலையில் அடுக்குமாடி குடியிருப்பின் கீழ் தளத்தில் பிரான்சிஸ் மரக்கடையையும் நடத்தி வருகிறார். இந்நிலையில் இந்த மரக்கடையில் திடீரென தீவிபத்து ஏற்பட்ட நிலையில் இதுகுறித்து அப்பகுதி மக்கள் உடனடியாக வாணியம்பாடி தீயணைப்பு துறையினர் மற்றும் வாணியம்பாடி நகர காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.. பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த நபர்களை உடனடியாக வெளியேற்றி அப்பகுதியில் மின்சாரத்தை துண்டித்து மரக்கடையில் ஏற்பட்ட தீயை அணைக்க போராடினர். ஆனால் அதற்குள் தீ கடை முழுவதும் பரவிக் கொளுந்து விட்டு எரிய தொடங்கியது இதனை தொடர்ந்தி ஆம்பூர், தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்ட அவர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஒரு மணி நேரத்திற்க்கும் மேலாக போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் இந்தத் தீ விபத்தால் மரக்கடையில் இருந்த 20 லட்சம் மதிப்பிலான மரச்சாமான்கள் மற்றும் இயந்திரங்கள் மற்றும் கடையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் ஆகியவை தீயில் எரிந்து நாசமாகின மேலும் இந்தத் தீவிபத்து குறித்து வாணியம்பாடி நகர காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்...

Tags

Next Story