காரைக்குடியில் கொடி அணிவகுப்பு ஊர்வலம்

காரைக்குடியில் கொடி அணிவகுப்பு ஊர்வலம்

கொடி அணிவகுப்பு 

100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி காரைக்குடியில் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் பதட்டமான பகுதிகளில் அச்சமின்றி 100 சதவீத வாக்களிக்க வலியுறுத்தி காவல்துறையினர் கொடி அணிவகுப்பு காரைக்குடி போலீஸ் பிரேடு கிரவுண்டில் இருந்து ADSP பிரான்சிஸ் மற்றும் காரைக்குடி DSP பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது. இந்த கொடி அணிவகுப்பில் காரைக்குடி கோட்டக் காவலர்கள் 65 பேர் மற்றும் துப்பாக்கி ஏந்திய நாகலாந்து போலீசார் 104 பேர் நகரின் முக்கிய பதட்டமான பகுதிகளான அண்ணா நகர், கழனி வாசல் புது ரோடு, மீனாட்சிபுரம் ஆகிய பகுதிகளில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது‌. கலவர தடுப்பு வஜ்ரா வாகனத்துடன் இந்த கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

Tags

Read MoreRead Less
Next Story