ஒரத்தநாடு அருகே கஞ்சா  வியாபாரி கைது: 17 கிலோ கஞ்சா பறிமுதல் 

ஒரத்தநாடு அருகே கஞ்சா  வியாபாரி கைது: 17 கிலோ கஞ்சா பறிமுதல் 

கோப்பு படம் 

ஒரத்தநாடு அருகே கஞ்சா  வியாபாரி கைது செய்யப்பட்டு, 17 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே 17 கிலோ கஞ்சாவை விற்பனை செய்வதற்காக வைத்திருந்த வியாபாரியை காவல்துறையினர் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு காவல் ஆய்வாளர் வி.சந்திராவுக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, பருத்திக்கோட்டை நெல்லுக்கடை பேருந்து நிறுத்தத்துக்கு சென்றார்.

அங்கு இரண்டு ட்ராவல் பேக்குகளை வைத்துக் கொண்டு நின்றவரை பிடித்து, சோதனை செய்தபோது, அதில் ரூ.1.75 லட்சம் மதிப்புள்ள 17 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து விசாரித்தபோது, அவர் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா தும்மங்குண்டு மெயின்ரோட்டைச் சேர்ந்த ஆர்.கணேசன்(60) என்பதும், அங்கிருந்து,

கஞ்சாவை துணிகளில் சுற்றி ட்ராவல் பேக்கில் வைத்துக் கொண்டு, பேருந்து மூலம் ஒரத்தநாடு பகுதிக்கு கொண்டு வந்ததும், பின்னர் இங்குள்ளவர்களிடம் விற்க முயன்றதும் தெரியவந்தது.

அதையடுத்து கணேசனை ஒரத்தநாடு காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story