உலக முதலீட்டாளர்கள் மாநாடு: பெரம்பலூர் மாவட்டத்தில் நேரலை
முதலீட்டாளர்கள் மாநாடு
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜனவரி 7ஆம் தேதி சென்னை நந்தனத்தில் உள்ள வர்த்தக மையத்தில் ஒன்றிய வர்த்தக மற்றும் தொழில்துறை நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ்கோயல் முன்னிலையில் தொடங்கி வைத்தார்.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை வடிவமைப்பதில் தமிழ்நாடு முக்கிய பங்காற்ற வேண்டும் என்ற நோக்கில் 2030 ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டினுடைய பொருளாதாரத்தை 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு உயர்த்த வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டுள்ள.
இந்த மாநாட்டில் பல்வேறு முதலீடுகள் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடுதல், பல்வேறு தொழில் கொள்கைகள் அறிமுகம் செய்தல், வணிக ஈடுபாடுகள், பல்வேறு துறை சார்ந்த கண்காட்சிகள் என பல்வேறு முக்கிய நிகழ்வுகள் இடம்பெற்றன.
இந்த உலக முதலீட்டாளர்கள் மநாட்டினை பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள், சிறுகுறு தொழில் முனைவோர், பல்வேறு தொழில் நிறுவனத்தினர் மற்றும் பொதுமக்கள் என சுமார் 11,000க்கும் மேற்பட்டோர் நேரலையில் கண்டுகளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. அதனடிப்படையில், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் கற்பகம், தலைமையில் சிறு குறு தொழில் முனைவோர்கள் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நேரலையில் கண்டுகளித்தனர்.
அதேபோல, பெரம்பலூர் மாவட்டத்தில் வேப்பந்தட்டை அரசு கலை அறிவியல் கல்லூரி, பெரம்பலூர் அரசு கலை அறிவியல் கல்லூரி, வேப்பூர் அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரி, ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி, தனலட்சுமி சீனிவாசன் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், மற்றும் கல்லூரி, ' ரோவர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகளில் மொத்தம் 9,051 மாணவ மாணவிகளும், பள்ளிக்கல்வித்துறையின் சார்பில், பெரம்பலூர், சத்திரமனை, சு,ஆடுதுறை, பாடாலூர் அரசு மேல்நிலைப்பள்ளிகள், ஈடன் கார்டன்ஸ் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி, தோமினிக் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பெரம்பலூர் மாதிரி பள்ளி என மொத்தம் 18 பள்ளிகளைச் சேர்ந்த 1,100க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகளும், சிட்கோ தொழிற்பேட்டையில் தொழில் புரிவோர்களும், மேலும் மாவட்டத்தில் மக்கள் அதிகளவில் கூடும் பகுதிகளில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் அதநவீன மின்னணு வீடியோ வாகனத்தின் மூலமும் என பல்வேறு இடங்களில்
சுமார் 11,000 மாணவ,மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பார்வையிடும் வகையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நிகழ்வினை நேரலையில் ஒளிபரப்பப்பட்டது, இந்நிகழ்வு அனைத்து தரப்பினரிமும் நல்ல வரவேற்பை பெற்றள்ளதாக, மாவட்ட நிர்வாகத்தின் மூலம் இன்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.