கம்பைநல்லூர் வாரச்சந்தையில் ஆடுகள் விற்பனை ஜோர்

கம்பைநல்லூர் வாரச்சந்தையில் ஆடுகள் விற்பனை ஜோர்

ஆடுகள் விற்பனை

கம்பைநல்லூர் வார சந்தையில் ஆடுகள் ரகத்திற்கு தகுந்தார் போன்று 5000 ரூபாய் முதல் 9500 வரையில் விற்பனை.
தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கம்பைநல்லூர் பகுதியில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை நாட்களில் வாரச்சந்தை பெறுவது வழக்கம் மேலும் இந்த சந்தைக்கு தர்மபுரி மாவட்டம் மட்டுமல்லாது கிருஷ்ணகிரி திருவண்ணாமலை சேலம் உள்ளிட்ட வெளி மாவட்டங்களிலும் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் வந்து செல்வது வழக்கம். நேற்று நடைபெற்ற வார சந்தையில், ஆடுகளை விற்க மட்டும் வாங்க பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள், வியாபாரிகள் வந்திருந்தனர். ஆடுகள் ரகத்திற்கு தகுந்தாற் போன்று ஆடு 5,000 ரூபாய் முதல் 9,500 வரை விற்பனையானது மேலும் நேற்று 23 லட்சத்திற்கு ஆடுகள் வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story