நாமக்கல் நவோதயா பள்ளியில் கே.ஜி மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா ..! King News 24x7

நவோதயா பள்ளி
மார்ச்: 26.03.2025 வியாழக்கிழமைகாலை 10 மணியளவில் நவோதயா அகாடமி சீனியர் செகண்டரி பள்ளியில் கே.ஜி மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா நடத்தப்பட்டது.விழாவிற்கு சிறப்பு விருந்தினராக நாமக்கல் வழக்கறிஞர் திருமதி.ரேகா BA.BL அவர்கள் கலந்துகொண்டார். மேலும் Pre KG, LKG&UKG என மூன்றாண்டுகளைமுடித்துவிட்டுஒன்றாம் வகுப்பிற்கு செல்லும் ஒவ்வொரு மாணவர்களுக்கும் தனித்தனியாக பட்டங்கள்,பதக்கம் மற்றும் கேடயம்; வழங்கிகுழந்தைகளைப் பாராட்டினார்.மேலும் அவர் பேசும் போதுஇன்றையகாலகட்டத்தில் பெண் குழந்தைகளைபெற்றோர்கள் மிகவும் கவனமாகவளர்;க்கவேண்டும்,பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் குற்றங்களைதடுப்பதற்கு பல்வேறுசட்டவிதிகள் உள்ளது. அதனைபெற்றோர்கள் விழிப்புணர்வோடு கட்டாயம் அறிந்திருக்கவேண்டும் என்று கூறிவிழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
பள்ளியின் பொருளாளர் திரு. கா. தேனருவி அவர்கள் விழாவிற்கு தலைமை ஏற்று நடத்தினார். அவர் பேசுகையில் குழந்தைகள் எதிர் காலத்தில் என்ன ஆக வேண்டும் என்றுநினைகின்றார்களோ அந்த பதவியின் பெயரைச் சொல்லி குழந்தைகளைபெற்றோர்கள் அழைக்காலம் ; ஏனென்றால் நாம் குழந்தைகளிடம் பேசுகின்ற ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் வலிமை உண்டு,அந்த வலிமையான சொற்கள் எண்ணங்களாகவும்,செயலாகவும் அவர்களின் வாழ்க்தைத் தரத்தை கண்டிப்பாக உயர்த்தும் என்று கூறிவாழ்த்தினார். முன்னதாக மழலையர் குழந்தைகள் வரவேற்புரை நிகழ்த்தி,வரவேற்பு நடனம் ஆடி அனைவரின் பாராட்டுகளையும் பெற்றனர்.பள்ளியின் முதல்வர் திருஆண்டனிராஜ் அவர்கள் KG வகுப்பில் நடைபெறும் செய்ல் திறன்வகுப்புகள்,மற்றும் மாண்டிச்சோரி கல்விமுறைகள் எப்படி கற்பிக்கப்படுகிறது என்றும்; விளக்கமாக கூறினார். பெற்றோர்கள் தங்கள் கருத்துகளைக் கூறும் போது இது ஒருபல்கலைக்கழக பட்டமளிப்புவிழா போன்று உள்ளது என்றும், இது போன்ற நிகழ்வுகள் குழந்தைகளுக்கு நல்ல உற்சாகத்தை தரும் என்றனர்.நிறைவாக 12.30 மணியளவில் நாட்டுப் பண் இசைக்கநிகழ்ச்சிநிறைவுப் பெற்றது