ஒசூர் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கூட்டம்: திமுகவினர் தர்ணா

ஒசூர் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கூட்டம்: திமுகவினர் தர்ணா

வெறிச்சோடிய கூட்ட அரங்கம்

ஒசூர் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கூட்டம், தலைவருக்கு இணையாக துணை தலைவர் அமரக்கூடாது என தர்ணாவில் ஈடுபட்ட திமுகவினரால் பரபரப்பு ஏற்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவராக சசி வெங்கடசாமி இருந்து வருகிறார்.. பட்டியலின சமூகத்தினருக்கு தலைவர் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் 16 உறுப்பினர்கள் கொண்ட ஒசூர் ஒன்றியத்தில் அதிமுக -8, அப்போதைய கூட்டணியான தேமுதிக - 1, உடன் இணைந்து தலைவர் மற்றும் துணை தலைவர் பதவியை கைப்பற்றியது.

திமுகவின் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் 7 பேர் உள்ளனர். பட்டியலின சமூக பெண் சேர்மன் என்பதால், பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த துணை தலைவர், கூட்ட அரங்கில் தலைவருக்கு இணையாக அமர்ந்து அவர் மட்டும் அதிகாரம் செலுத்துவதாக அதிமுக, திமுக கவுன்சிலர்களே புகார் தெரிவித்து வந்தநிலையில் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு நடந்த ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் துணை தலைவருக்கு தனி அறை, கூட்ட அரங்கில் மேல் இருக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கவுன்சிலர்கள் தர்ணாவில் ஈடுபட்டிருந்தனர்.

ஆளுங்கட்சியினரின் எதிர்ப்புக்கிடையில் ஒசூர் ஒன்றிய அலுவலகத்தில் துணை தலைவருக்கான தனி அறை இல்லையெனக்கூறி மேல் இருக்கையும் அகற்றப்பட்டு, இன்று காலை ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கூட்டம் நடைப்பெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்,

அதிமுகவினர் மட்டுமே இன்றைய கூட்டத்தில் பங்கேற்றதாலும், துணை தலைவர் மற்றும் திமுகவினர் பங்கேற்காததால் இன்றைய கூட்டம் ரத்து செய்வதாகவும் மறு தேதி பின்னர் அறிவிப்பதாக ஒன்றிய அலுவலர் அறிவித்துள்ளார்.

துணை தலைவருக்கு எதிராக போராடிய திமுகவினர், அவருக்கு இருக்கை அகற்றிய நிலையில் கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்தது பரபரப்பை ஏற்ப்படுத்தி உள்ளது..

Tags

Next Story