பள்ளம் தோண்டும் போது கிடைத்த சிலைகள்
திண்டுக்கல்லில் அபிராமி கோவில் அருகே பள்ளம் தோண்டும் போது சிலைகள் உட்பட பல்வேறு பொருட்கள் கிடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல்லில் அபிராமி கோவில் அருகே பள்ளம் தோண்டும் போது சிலைகள் உட்பட பல்வேறு பொருட்கள் கிடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் அபிராமி அம்மன் திருக்கோவிலுக்கு சொந்தமான தேரடி பின்புறத்தில் கட்டுமான பணிக்கு பள்ளம் தோண்டினர். அப்போது பழைய திருக்கோயிலில் இருந்த மன்னர்கள் உருவம் பதித்த தூண்களும் பழனி முருகப்பெருமான் உருவம் குறித்த கற்தூண்களும் பூமியிலிருந்து கண்டு எடுக்கப்பட்டது.
இதுகுறித்து எந்த தகவலும் திருக்கோயில் அலுவலர்கள் அரசு துறைக்கு தெரிவித்தார்களா என்பது தெரியவில்லை. முழுமையான ஆய்வறிக்கை விசாரணை செய்ய மேற்கொள்ள வேண்டும் என்று இந்து தமிழர் கட்சியின் சார்பில் அபிராமி அம்மன் திருக்கோயில் செயல் அலுவலரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது .
Next Story