மேலூரில் முதல்வர் பிறந்தநாளை கொண்டாடிய திமுகவினர் !

மேலூரில் முதல்வர் பிறந்தநாளை கொண்டாடிய  திமுகவினர் !

முதல்வர் பிறந்தநாளை கொண்டாடிய திமுகவினர்

மேலூரில், தமிழக முதல்வர் முக.ஸ்டாலினின் 71வது பிறந்தநாளையொட்டி பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் திமுகவினர் கொண்டாட்டம்.
மேலூரில், தமிழக முதல்வர் முக.ஸ்டாலினின் 71வது பிறந்தநாளையொட்டி பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் திமுகவினர் கொண்டாட்டம். மதுரை மாவட்டம் மேலூரில், தமிழக முதல்வர் முக ஸ்டாலின் 71வது பிறந்தநாளை முன்னிட்டு, மேலூர் பேருந்து நிலையம் முன்பு நகர்மன்ற தலைவர் முகமது யாசின் தலைமையில், திமுகவினர் பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், தமிழகத்தின் நிரந்தர முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என பல்வேறு வாழ்த்து கோஷங்களை எழுப்பி, பேருந்து மற்றும் இருசக்கர வாகனத்தில் சென்ற பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.. தொடர்ந்து, மேலூர்-சொக்கம்பட்டி பகுதியில் உள்ள அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் அறக்கட்டளையில் ஆதரவற்ரவர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், மேலூர் நகர்மன்ற தலைவர் முகமது யாசின் உட்பட திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story