இந்திய ஆட்சிபணி தேர்வு விழிப்புணர்வு முகாம்
இந்திய ஆட்சிப் பணி தேர்வு விழிப்புணர்வு முகாம்
திருநெல்வேலி மாவட்டம்,அரசு மகளிர் கல்லூரியில் இந்திய ஆட்சி பணி தேர்வு முறை குறித்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
நெல்லை மாவட்டம் ராணி அண்ணா அரசு மகளிர் கலை கல்லூரியில் இந்திய ஆட்சி பணி மற்றும் தேர்வு முறை குறித்து விழிப்புணர்வு ஒரு நாள் முகாம் நேற்று நடைபெற்றது. இதில் கல்லூரி முதல்வர் மைதிலி தலைமை தாங்கினார். நெல்லை சரக போலீஸ் டிஐஜி மூர்த்தி, திருவனந்தபுரம் செய்தி தொடர்பு அலுவலக தலைமை இயக்குனர் பழனிச்சாமி, ஐ. ஏ. எஸ் அதிகாரி ராம செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கல்லூரி மாணவிகள்,பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
Next Story