கெலவரப்பள்ளி நீர்த்தேக்க அணையில் நீர்ப்பாசனத்துறை அதிகாரிகள் ஆய்வு

கெலவரப்பள்ளி நீர்த்தேக்க அணையில் நீர்ப்பாசனத்துறை அதிகாரிகள் ஆய்வு

அதிகாரிகள் ஆய்வு 

ஒசூர் அருகே கெலவரப்பள்ளி நீர்த்தேக்க அணையில் நீர்ப்பாசனத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

ஒசூர் அருகே கெலவரப்பள்ளி நீர்த்தேக்க அணையில் நீர்ப்பாசனத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர் பெங்களூர் பகுதியில் இருந்து வெளியேற்றக் கூடிய கழிவு நீர் மற்றும் தொழிற்சாலை ரசாயண கழிவுநீர் தென்பெண்ணை ஆற்றில் கலந்து ஒசூர் அருகே கெலவரப்பள்ளி நீர்த்தேக்க வந்து சேருகிறது,

அணையில் இருந்து வெளியேற்றக் கூடிய நீர் துர்நாற்றம் வீசியும் , வெந்நுரையாக காணப்பட்டு,விளைநிலங்கள் பாதிக்கப்படுவதாக தொடர்ந்து செய்தி வெளியானது இதனை அடுத்து தமிழ்நாடு அரசு உத்தரவின்படி இன்று காலை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர் இந்த ஆய்வில் மத்திய நீர்வள துறை சேர்மேன்குஸ் விண்டர் ஓரா, முதன் தலைமை பொறியாளர் அசோகன், ஒசூர் பொதுப்பணித்துறை பொன்னிவளவன் ஆகியோர் தலைமையில் 15 பேர் கொண்ட குழுவினர் நேற்று கர்நாடக மாநிலத்திலும் இன்று தமிழக எல்லையான கொடியாலம், சொக்கரசனப்பள்ளி,

கெலவரப்பள்ளி நீர்த்தேக்க அணைப் பகுதிகளில் ஆய்வு மேற்க்கொண்டனர் ஆய்விற்குப் பின் நீர்வளத் துறை சேர்மன் தெரிவிக்கையில்,

தற்போது இது குறித்து இன்று தான் ஆய்வு மேற்கொண்டு உள்ளோம் தொடர்ந்து ஆய்வின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்

Tags

Next Story