சர்வதேச யோகா தினம்

சர்வதேச யோகா தினம்

நந்தா இயற்கை மற்றும் யோகா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.


நந்தா இயற்கை மற்றும் யோகா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.
நந்தா இயற்கை மற்றும் யோகா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை யின் சார்பில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் தலை வர் வி.சண்முகன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் நந்தா கல்வி நிறுவனங்களின் முதன்மை கல்வி அதிகாரி எஸ்.ஆறுமுகம், முதன்மை நிர்வாக அலுவலர் மு.கிருஷ்ண மூர்த்தி ஆகியோர் பேசினர். விழாவையொட்டி ஈரோடுமாவட்டத்தில் செயல்பட்டு வரும் 20-க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு நந்தா இயற்கை மற்றும் யோகா மருத்துவகல்லூரி மருத்துவமனையின் மருத் துவர்கள் மற்றும் மாணவர்கள் குழுக்களாக சென்றனர். அங்கு அவர்கள் மாணவ, மாணவிகளுக்கு யோகா பயிற்சிகளை மேற்கொள்ள கற்றுக்கொடுத்தனர். 3,500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு பயிற்சிகளை அளித்ததாக கல்லூரி முதல்வர் ஆர்.ரீவ்ஸ் ஜஸ்ட்லின் தாஸ் தெரிவித்தார்.

Tags

Next Story