ஊத்தங்கரையில் அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம்

ஊத்தங்கரையில் அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம்

வேட்பாளர் அறிமுக கூட்டம் 

ஊத்தங்கரை தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறகிறது.

இதனை முன்னிட்டு ஓசூர் சேர்ந்த ஜெயப்பிரகாஷ் அவர்கள் கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதியின் அதிமுக வேட்பாளராக அறிவிக்கபட்டார். ஊத்தங்கரையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. தனியார் மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கிருஷ்ணகிரி நாடாளுமன்ற வேட்பாளர் ஜெயப்பிரகாஷ் கலந்து கொண்டு தன்னை அறிமுகம் செய்து அதிமுக மற்றும் கூட்டணி கட்சியினரிடையே ஆதரவு கோரினார்.

இந்நிகழ்ச்சியில் அதிமுக துணை பொதுச்செயலாளர் வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினர் முனுசாமி ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் தமிழ்ச்செல்வம் முன்னாள் கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர் அசோக் குமார் பர்கூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி ஊத்தங்கரை தெற்கு ஒன்றிய செயலாளர் வேங்கன், வடக்கு ஒன்றிய செயலாளர் வேடி, நகர செயலாளர் சிக்னல் ஆறுமுகம் கிருஷ்ணகிரி மாவட்ட தேமுதிக நிர்வாகிகள் மற்றும் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்

Tags

Next Story