திருக்கோவிலூரில் விசிக வேட்பாளர் அறிமுக கூட்டம்

திருக்கோவிலூரில் விசிக வேட்பாளர் அறிமுக கூட்டம்

வேட்பாளர் அறிமுக கூட்டம்

திருக்கோவிலூரில் விசிக வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது.
விழுப்புரம் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட திருக்கோவிலூர் சட்டசபை தொகுதியில் இண்டியா கூட்டணி வேட்பாளரை அமைச்சர் பொன்முடி அறிமுகம் செய்து வைத்து பேசினார். விழுப்புரம் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட, திருக்கோவிலூர் சட்டசபை தொகுதியின் இண்டியா கூட்டணி வேட்பாளராக வி.சி.க., சார்பில் ரவிக்குமார் போட்டியிடுகிறார். இவரை அறிமுகம் செய்து வைக்கும் செயல்வீரர்கள் கூட்டம் திருக்கோவிலூர், தேவிமுருகன் திருமண மண்டபத்தில் நடந்தது. தி.மு.க., மாவட்ட செயலாளர் புகழேந்தி வரவேற்றார். எம்.பி., கௌதம சிகாமணி, எம்.எல்.ஏ., லட்சுமணன், மாவட்ட அவைத் தலைவர் ஜெயச்சந்திரன், மாவட்ட துணைச் செயலாளர் முருகன் முன்னிலை வகித்தனர்.அமைச்சர் பொன்முடி வி.சி.க., வேட்பாளர் ரவிக்குமாரை அறிமுகம் செய்து வைத்துப் பேசினார். தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் தங்கம், ரவிச்சந்திரன், விஸ்வநாதன், பிரபு, பிரேமாஅல்போன்ஸ், நகர செயலாளர்கள் கோபி கிருஷ்ணன், கணேசன், சுந்தரமூர்த்தி, செயற்குழு உறுப்பினர் செல்வராஜ் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story