மல்லாங்கிணறு காவல் நிலையத்திற்கு ஐஎஸ்ஓ தரச் சான்று

மல்லாங்கிணறு காவல் நிலையத்தின் செயல்பாடுகளை பாராட்டி இந்திய தர கவுன்சில் நிறுவனம் ஐஎஸ்ஓ தரச் சான்றிதழ் வழங்கியுள்ளது.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி காவல் நிலையம் 1868 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட மிகவும் பழமை வாய்ந்த காவல் நிலையம். அதன் பின்னர் கடந்த 2011 ஆம் ஆண்டு காவல் நிலையத்துக்கு புதியதாக கட்டடம் கட்டப்பட்டு அதில் செயல்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக இந்த காவல் நிலையத்தில் சட்டங்களை அமல்படுத்துதல், தடுத்தல், குற்றங்களை கண்டறிதல் மற்றும் விசாரணை செய்தல், சட்டம் ஒழுங்கை பராமரித்தல், அமைதியை நிலைநாட்டுதல், அவசரநிலைகளுக்கு பதிலளித்தல் மற்றும் பல சேவைகளை வழங்குதல் போன்றவற்றிற்காக ஐஎஸ்ஒ தரச்சான்றிதழ் வழங்குவதற்காக கடந்த 3 மாதங்களாக ஆய்வு பணி நடைபெற்று வந்தது.

அந்த வகையில் பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்ட காரியாபட்டி காவல் நிலையத்துக்கு இந்திய தர கவுன்சில் இந்திய அரசாங்கத்தால் பாதுகாப்பு மற்றும் சுகாதார சான்றிதழுக்கான பணியிட மதிப்பீட்டுக்காக சா்வதேச தர கட்டுப்பாட்டுச் சான்றிதழான மிகவும் மதிப்புமிக்க ISO 9001:2015 சான்றிதழ் காரியாபட்டி காவல் நிலையம், மற்றும் மல்லாங்கிணறு காவல் நிலையத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த காவல் நிலையத்தில் ஒரு வரவேற்பு அறை மற்றும் காத்திருப்பு அறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது பொதுமக்களுக்காக நூலக வசதியும், சிறுவர் சிறுமியர்களுக்காக பாய்ஸ் கிளப், சுற்றுப்புற சுவர்களில் திருக்குறள் அதற்குரிய விளக்கங்கள், மற்றும் தமிழர்களின் பாரம்பரிய கலைகளை சுவர்களில் ஒவியமாக வரையப்பட்டுள்ளது.

மேலும் பொதுமக்களுக்கு பாதுகாப்பானதாகவும், காத்திருக்க உகந்ததாகவும் கட்டிடத்தின் உட்புற வேலைகள் செய்யப்பட்டுள்ளன. நிலையப் பதிவேடுகள் முறையாகப் பராமரிக்கப்படுகின்றன. (இந்திய தர கவுன்சில் -இந்திய அரசு) மூலம் ISO சான்றிதழைப் பெற்ற விருதுநகர் மாவட்டத்தில் முதல் காவல் நிலையம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐஎஸ்ஓ தரச் சான்றிதழை ‘கொயஸ்ட்‘ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி காா்த்திகேயனிடமிருந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா பெற்றுக் கொண்டார். இந்நிகழ்வில் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் காயத்ரி, இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சார்பு ஆய்வாளர்கள் அசோக்குமார், மகேஸ்வரன் உட்பட காவல்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story