வத்தம்பட்டியில் கபடி போட்டி

வத்தம்பட்டியில் கபடி போட்டி

கபடி போட்டி 

புதுக்கோட்டை மாவட்டம், வத்தம்பட்டியில் நடைபெற்ற கபடி போட்டியில் 24 மாவட்டங்கள் பங்கேற்றன.

பொன்னமராவதி அருகே வத்தம்பட்டியில் வி.கே மெமோரியல் கிளப் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் 15வது ஆண்டு கபடி போட்டி நடந்தது. இதில் புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இருந்து 24 அணிகள் பங்கேற்றன.

முதல் பரிசை கே. சுக்காம்பட்டி அணி, இரண்டாம் பரிசை வத்தம்பட்டி விகே மெமோரியல் கிளப் அணி, மூன்றாம் பரிசை பாறைக்கலம் அணியினர் பெற்றனர். வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்க பரிசு மற்றும் சிறந்த வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Tags

Read MoreRead Less
Next Story