கள்ளக்குறிச்சி பருத்தி சந்தை ரூ.15.7 லட்சம் பஞ்சு கொள்முதல் !

கள்ளக்குறிச்சி பருத்தி சந்தை ரூ.15.7 லட்சம் பஞ்சு கொள்முதல் !

பருத்தி

கள்ளக்குறிச்சியில் நடந்த பருத்தி வார சந்தையில் ரூ.15.07 லட்சத்துக்கு பஞ்சு கொள்முதல் செய்யப்பட்டது.
கள்ளக்குறிச்சியில் நடந்த பருத்தி வார சந்தையில் ரூ.15.07 லட்சத்துக்கு பஞ்சு கொள்முதல் செய்யப்பட்டது. கள்ளக்குறிச்சி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நேற்று பருத்தி வார சந்தை நடந்தது. கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலுார் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் பலர் எல்.ஆர்.ஏ., ரக பஞ்சு 645 மூட்டைகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். எல்.ஆர்.ஏ., ரகம் குறைந்தபட்சம் 6,499 ரூபாய்க்கும், அதிகபட்சம் 8,087 ரூபாய்க்கும் விலை போனது. 135 விவசாயிகள் கொண்டுவந்த 645 பஞ்சு மூட்டைகள், 15 லட்சத்து 7 ஆயிரம் ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டது.

Tags

Read MoreRead Less
Next Story