மறை வட்ட முதன்மை பணியாளருக்கு எம்பி விஜய் வசந்த் நேரில் வாழ்த்து

மறை வட்ட முதன்மை பணியாளருக்கு எம்பி விஜய் வசந்த் நேரில் வாழ்த்து

விஜய் வசந்த் 

முளகுமூடு மறைவட்ட முதன்மை பணியாளராக பொறுப்பேற்ற அருள்தந்தை டேவிட் மைக்கேலுக்கு எம்பி விஜய் வசந்த் வாழ்த்து தெரிவித்தார்.

முளகுமூடு மறை வட்ட முதன்மைப் பணியாளராக அருட்தந்தை டேவிட் மைக்கேல் பதவியேற்பு இன்று தூய மரியன்னை பசிலிக்காவில் நடைபெற்றது.

முளகுமூடு மறை மாவட்ட தலைமை ஆலயமான தூய மரியன்னை பசிலிக்காவின் குழித்துறை மறை மாவட்ட புதிய முதன்மை பணியாளர் சேவியர் பெனடிக் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் குழித்துறை மறை மாவட்டத்தின் முளகுமூடு மறை வட்ட முதன்மை பணியாளராக பொறுப்பேற்ற அருள்முனைவர் டேவிட் மைக்கேலுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். மேலும் சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் ராஜேஷ்குமார் மற்றும் முக்கிய பிரமுகர்கள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story