எம்எல்ஏ தலைமையில் ஊராட்சி நடுநிலைப்பள்ளி ஆண்டு விழா கொண்டாட்டம்

கோடி அள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழா கொண்டாட்டம் நடந்தது.

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கோடிஅள்ளி ஊராட்சி டீ கடை பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆண்டு விழா நேற்று இரவு வெகு விமரிசியாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாட்டாளி மக்கள் கட்சியின் கவுரவ தலைவரும் சட்டமன்ற தொகுதியின் உறுப்பினருமான ஜி கே மணி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

மேலும் பள்ளி அளவில் நடைபெற்ற பாட்டு போட்டியின் நடனம் கவிதை போட்டி பேச்சுப்போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். மாணவர்களுக்கு கல்வி தான் மிகவும் முக்கியம் என்றும் அதைவிட உடல் நலன் மிகவும் முக்கியம் பெற்றோர்களின் சொற்படி நடந்து வாழ்க்கையில் லட்சியத்தை அடைய வாழ்த்துக்கள் என சிறப்புரையாற்றினார்.

இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் பெருமக்கள் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story