வீரப்பன் மகள் வித்யாராணியை ஆதரித்து பிரச்சார்ம செய்த சீமான்..!

வீரப்பன் மகள் வித்யாராணியை ஆதரித்து பிரச்சார்ம செய்த சீமான்..!

வீரப்பன் மகனை ஆதரித்து சீமான் பிரச்சாரம்

தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வித்யாராணி வீரப்பனை ஆதரித்து சீமான் பிரச்சாரம் செய்தார்.

கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வித்யாராணி வீரப்பனை ஆதரித்து, அக்கட்சியின் தலைவர் சீமான் பாட்டு பாடி ஓட்டு கேட்டு பிரச்சாரம் செய்தார்.

மத்தூர் பேருந்து நிலையத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் வாக்கு கேட்டு பேசிய சீமான், 'வீரப்பன் உயிரோடு இருந்திருந்தால், தமிழ்நாட்டில் இருந்து பெண்களை அழைத்து சென்று கர்நாடகா மாநில போலீசார் சித்ரவதை செய்திருக்க முடியுமா. வீரப்பன் காட்டிற்குள் இருக்குபோது சொல்கிறார், ஒரு நாள் நான் காட்டில் இருந்து வெளியே வந்து தேர்தலில் நிற்பேன், என் மக்கள் எனக்கு வாக்களிப்பார்கள். நானும் ஒரு நாள் அதிகாரத்திற்கு வருவேன் என தெரிவித்தார். அவர் வரவில்லை. ஆனால் அவரது அரசியல் வாரிசாக வித்யாராணி வீரப்பன் களத்தில் நிற்க வைத்துள்ளேன்.

காட்டை காத்த மாவீரனின் மகள், இந்த நாட்டை காக்க போராடுவாள் என்கிற உறுதியை நான் உங்களுக்கு தருகிறேன். காட்டில் வீரப்பன் சந்தை மரங்களை வெட்டி விற்றார், யானை தந்தங்களை விற்றார் என குற்றம்சாட்டியவர்களிடம் நான் கேட்ட கேள்வி ஒன்று தான். விற்றவர்கள் காட்டிற்குள்ளே இருக்கிறார், வாங்கியவர் எங்கே இருக்கிறார் எனக் கேட்டேன்.

நாட்டிற்குள் நாட்டை ஆளபவர்கள் சாராயம் ஆலை வைத்து காய்ச்சி விற்கும் போது, காட்டிற்குள் வீரப்பன், சாராயம் காய்ச்சி விற்பனை செய்தாரா, மாளிகைகள் கட்டினாரா. வீரப்பனை திருடன், மாயாவி என பட்டம் சுமத்துகிறீர்கள், அப்படி என்றால் ஜெயலலிதா, கருணாநிதிக்கு என்ன பெயர் வைப்பீர்கள். காட்டிற்குள் வாழ்ந்த வீரப்பன், நாகப்பாவை கடத்தினர். அவர் நினைந்திருந்தால் நமீதாவை கடத்திருக்க முடியாதா?. தமிழர்கள் அறம் சார்ந்து வாழ்ந்த மறவர்கள்.

காவிரியில் ஒரு சொட்டு தண்ணீர் கூட கொடுக்க முடியாது என கர்நாடகாவில் கூறுகிறார்கள். தமிழர்களுக்கு தண்ணீர் கொடுக்க நாங்கள் என்ன முட்டாள்களாக என கேட்கின்றனர். ஒரு நொடி நினைத்து பாருங்கள், காட்டிற்குள் வீரப்பன் இருந்திருந்தால், காவிரியில் ஒரு சொட்டு தண்ணீர் கொடுக்க முடியாது என கூற முடியுமா. வரலாற்றை அறிந்து கொண்டால் தமிழர்கள் விழித்துக் கொள்வார்கள் என்பதற்காக, திட்டமிட்டு அழித்தார்கள். தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர் பாட்டு பாடி சிட்டிகை போட்டு ஓட்டு கேட்டு பிரச்சாரத்தை மேற்கொண்டார். அவர் பேசுகையில் எங்களுக்கு ஓட்டு போடுங்கள் போடாமல் போங்கள் ஆனால் மற்றவர்களுக்கு போட்டு விடாதீர்கள் என்று பகிர் பேச்சை பேசி பிரச்சாரத்தை நிறைவுற்றார்.

Tags

Read MoreRead Less
Next Story