குளச்சல் பேருந்து நிலைய  பணிகள் - மாவட்ட ஆட்சியர் ஆய்வு

குளச்சல் பேருந்து நிலைய  பணிகள் - மாவட்ட ஆட்சியர் ஆய்வு
குளச்சல் பஸ் நிலைய பணிகளை பார்வையிட்ட கலெக்டர்
குளச்சலில் புதிதாக கட்டப்பட்டு வரும் பேருந்து நிலைய கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் பி.என்.ஸ்ரீதர் இன்று (15.05.2024) ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்- பொதுமக்கள் மற்றும் பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில் உட்கட்டமைப்பு மற்றும் வசதிகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.5 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு வரும் பணியினை நேரில் பார்வையிடப்பட்டது.

புதிதாக அமைக்கப்பட்டு வரும் பேருந்து நிலையத்தில் 36 கடைகள், ஒரு உணவு விடுதி மற்றும் கட்டிடத்தின் கீழ் தளத்தில் இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இப்பணியினை விரைந்து முடித்திட நகராட்சி ஆணையாளர் மற்றும் உதவி செயற்பொறியாளர்க்கு அறிவுறுத்தப்பட்டது.

மேலும் குளச்சல் நகராட்சிக்குட்பட்ட திடக்கழிவு மேலாண்மை மைய வளாகத்தில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1.57 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் நவீன எரிதகன மேடை பணி ஆய்வு செய்யப்பட்டது. இவ்வாறு கூறினார். நடைபெற்ற ஆய்வுகளில் குளச்சல் நகராட்சி ஆணையாளர் செந்தில் குமார், உதவி செயற்பொறியாளர் ஜெயந்தி உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

Tags

Read MoreRead Less
Next Story