KYCஅப்டேட் செய்வதாக பெண்ணிடம் ரூ.2,60,000 மோசடி

KYCஅப்டேட் செய்வதாக பெண்ணிடம் ரூ.2,60,000 மோசடி
X
திண்டுக்கல்லில் KYC அப்டேட் செய்வதாக பெண்ணிடம் ரூ.2,60,000 மோசடி - சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு
திண்டுக்கல்லை சேர்ந்த இந்திரமதி( பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவர் பார்மா மொத்த கடையில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் இவரது செல்போனுக்கு KYC அப்டேட் செய்ய வேண்டும் என்று குறுஞ்செய்தி வந்தது அந்த செய்தியின் லிங்கை இந்திரமதி தொட்டபோது மர்ம நபர் ஒருவர் அவரை தொடர்பு கொண்டு வங்கி அதிகாரி போல் பேசி வங்கி கணக்கு எண் வாடிக்கையாளரின் அடையாளம் மற்றும் முகவரி உள்ளிட்டவற்றை பதிவு செய்ய கூறியதை தொடர்ந்து இந்திரமதி பதிவு செய்ததை தொடர்ந்து அவரது வங்கிக் கணக்கில் இருந்த பணம் ரூ.2,60,000 திருடு போனது. இதுகுறித்து இந்திரமதி திண்டுக்கல் மாவட்ட எஸ்பி.பிரதீப் அவர்களிடம் அளித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் காவல் நிலைய ஆய்வாளர் விக்டோரியா லூர்து மேரி சார்பு ஆய்வாளர் ஈஸ்வரி மற்றும் காவலர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story