ஸ்ரீமதுரை வீரன் 11-ம் ஆண்டு தீமிதி திருவிழா

ஸ்ரீமதுரை வீரன்  11-ம் ஆண்டு தீமிதி திருவிழா

தீ மிதி திருவிழா

ஸ்ரீமதுரை வீரன், ஸ்ரீமுனீஸ்வரர், ஸ்ரீதேவி நாகாத்தம்மன் கோவிலின் 11-ம் ஆண்டு தீமிதி திருவிழா நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பூச்சிஅத்திப்பேடு ஊராட்சியில் லட்சுமி அம்மன் கோவில் தெருவில் பிரசித்தி பெற்ற ஸ்ரீமதுரைவீரன்,ஸ்ரீமுனீஸ்வரர் ஸ்ரீதேவிநாகாத்தம்மன் கோவில் உள்ளது.

இக்கோவிலில் 11-ம் ஆண்டு தீமிதி திருவிழா நிகழ்ச்சி இன்று இரவு நடைபெற்றது. இதை முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை காலை ஸ்ரீசெல்லியம்மன் ஆலயத்தில் இருந்து கங்கை நீர்,பால்குடம் எடுத்து வந்து அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டது. மாலை பக்தர்களுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.இரவு தேர் பவனி சக்தி கிரகம் ஊர்வலம் நடைபெற்றது.

சனிக்கிழமை மதியம் கோவில் வளாகத்தில் கிராம பொதுமக்கள் சார்பாக அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இரவு அக்கினிக்கப்பரை ஊர்வலம் நடைபெற்றது. இன்று காலை ஸ்ரீசெல்லியம்மன் கோவிலிலிருந்து பால்காவடி அலங்கரிக்கப்பட்டு மேளதாளம் முழங்க ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தது. அதன் பின்னர், அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம்,தூப-தீப ஆராதனை உள்ளிட்டவை நடைபெற்றது. மாலை வேப்பம்பேடு கிராமம் ஸ்ரீசெல்லியம்மன் கோவிலிலிருந்து பூக்களாலும், மின்விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட அம்மன் சென்று புனித நீராடிய பக்தர்களை கோவிலுக்கு அழைத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பின்னர், கோவிலுக்கு அருகே அமைக்கப்பட்டு இருந்த தீ குண்டத்தில் ஒருவர் பின், ஒருவராக இறங்கி தீ மிதித்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்.

Tags

Read MoreRead Less
Next Story