பெரம்பலூரில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக மகளிரணி ஆலோசகர் வாக்கு சேகரிப்பு

பெரம்பலூரில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக மகளிரணி ஆலோசகர் வாக்கு சேகரிப்பு

மகளிர் அணி ஆலோசகர் வாக்கு சேகரிப்பு

தி.மு.க.வேட்பாளர் அருண்நேருவிற்கு ஆதரவாக, திமுக மாநில மகளிர் அணி ஆலோசகர் வாசுகி ரமணன் பெரம்பலூர் நகரப்பகுதிகளில் வாக்குகள் சேகரித்தார்

பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி தி.மு.க.வேட்பாளர் கே.என்‌.அருண்நேரு வை ஆதரித்து, பெரம்பலூர் நகரத்தில் உள்ள 7,8,9,10,11 ஆகிய வார்டுகளிலும் மற்றும் அரணாரை பகுதியிலும் திமுக மாநில மகளிர் அணி ஆலோசகர் வாசுகி ரமணன் தி.மு.க.அரசின் சாதனைகளை எடுத்துக் கூறியும், மத்திய பா.ஜ.க.அரசு தமிழகத்திற்கு செய்து வரும் துரோகங்களை பட்டியலிட்டும் வாக்குகள் சேகரித்தார்.

இதில் மாவட்ட பொறுப்பாளர் ஜெகதீசன், சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன், தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் அண்ணாதுரை, மாவட்ட பொருளாளர் ரவிச்சந்திரன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஹரிபாஸ்கர்,

துணை அமைப்பாளர்கள் சிவசங்கர், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் மகாதேவி ஜெயபால், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் கமல், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் ரினோபாஸ்டின், தொ.மு.ச.மாவட்ட கவுண்சில் செயலாளர் ரெங்கசாமி, நகராட்சி கவுன்சிலர் ஷாலினி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள உறுப்பினைகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story