மூதாட்டியிடம் தங்க சங்கிலியை பறித்து சென்ற நபர் கைது

மூதாட்டியிடம் தங்க சங்கிலியை பறித்து சென்ற நபர் கைது

பாட்டில்மணி (எ) மணிகண்டன் 

பெரம்பலூர் மாவட்டத்தில் மூதாட்டியிடம் தங்க சங்கிலியை பறித்து சென்ற நபரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பெரம்பலூர் மாவட்டம் நன்னை கிராமத்தைச் சேர்ந்த பார்வதி வயது.60, என்கின்ற மூதாட்டி. நன்னை பேருந்து நிலையத்தில் இருந்து தனது மகன் வீட்டிற்கு நடந்து சென்றுகொண்டிருந்த போது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த அறிமுகமில்லாத இரண்டு நபர்கள் மூதாட்டியிடம் பேச்சுக்கொடுத்து கொண்டே வந்தவர்கள். பார்வதி கழுத்தில் அணிந்திருந்த 6 1/2 பவுன் தங்க சங்கிலியை பறித்துச் சென்றனர், குன்னம் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த குன்னம் காவல்துறையினர் தனிப்படை அமைத்து விசாரணையை மேற்கொண்டனர். இந்நிலையில் அவ்வழியில் உள்ள கண்காணிப்பு காமிராக்களை ஆய்வு செய்தும் பல கோணங்களில் விசாரணை செய்து வந்த தனிப்படையினர் குற்ற வழக்கில், திருச்சி சுப்ரமணியபுரம் முதல் தெரு பகுதியைச் சேர்ந்த சுந்தர் ராஜா மகன் பாட்டில்மணி என்கிற மணிகண்டன் வயது 27, என்பவர் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து மணிகண்டனை கைது செய்து விசாரித்ததில், குற்றவாளி மதுரை, திருச்சி, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் கொலை, கொள்ளை, செயின்பறிப்பு போன்ற பல குற்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளது தெரியவந்த நிலையில் குற்றவாளி என மணிகண்டன் மீது வழக்கு பதிவு செய்த குன்னம் காவல்துறையினர் குற்றவாளியிடமிருந்து 6 1/2 தங்கச் செயினை பறிமுதல் செய்தனர் பின்னர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாம்ளா தேவி உத்தரவின் பேரிலும் மங்களமேடு உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்ப சீராளன் வழிகாட்டுதலின்படியும் குற்றவாளி மணிகண்டனை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். இவ்வழக்கில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளியை கைது செய்த உதவி ஆய்வாளர் மதியழகன் தலைமையிலான தனிப்படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாம்ளா தேவி வெகுவாக பாராட்டினார்.

Tags

Next Story