ஆதீனத்தை பல்லக்கில் வைத்து மனிதன் சுமக்கும் நிகழ்ச்சி: பலத்த போலீஸ் பாதுகாப்பு

ஆதீனத்தை பல்லக்கில் வைத்து மனிதன் சுமக்கும் நிகழ்ச்சி: பலத்த போலீஸ் பாதுகாப்பு

பலத்த போலீஸ் பாதுகாப்பு

மயிலாடுதுறை தருமபுர ஆதீன மடத்தை பல்லக்கில் வைத்து மனிதர்கள் தோளில் சுமந்து செல்லும் பட்டண பிரவேசம் நிகழ்ச்சிக்கு பல்வேறு அமைப்பின் இடையே எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை தருமபுர ஆதீனத்தை பல்லக்கில் அமர வைத்து மனிதர்கள் பல்லக்கை தோளில் சுமந்து ஆ தின மடத்தின் நான்கு வீதிகளிலும் வீதியுலா வருவது வாடிக்கை. 26 ஆவது சன்னிதானம்.

இந்நிகழ்ச்சியை நிறுத்தி வைத்ருந்த நிலையில் தற்பொழுது வந்துள்ள 27 வது சன்னிதானம் நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்தி வருகிறது . 2022 ஆம் ஆண்டு பட்டினப்பிரவேசம் தடை செய்யப்பட்டது, இந்த அமைப்பினரின் போராட்டத்தால் மீண்டும் தடை நீக்கப்பட்டு பட்டன பிரவைசம் நடத்தப்பட்டது, சென்ற ஆண்டும் இந்நிகழ்ச்சி நடைபெற்று வந்த நிலையில்,

இந்த ஆண்டு ஆதீனம் ஆபாச வீடியோ வழக்கில் சிக்கியதையடுதாது மீண்டும் பல்வேறு அமைப்பினர் இப்பட்டின பிரவேச நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் எந்த அசம்பாவிதமும்,

ஏற்படாமல் இருக்க, மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Tags

Next Story