சேலத்தில் பெண்ணை சைகை மூலம் அழைத்தவர் அதிரடி கைது

X
கோப்பு படம்
சேலத்தில் பெண்ணை சைகை மூலம் அழைத்தவர் அதிரடி கைது செய்யப்பட்டார்.
சேலம் குகை சீரங்கன் தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (54). இவர் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவரிடம் சைகை மூலம் தவறாக அழைத்துக்கொண்டிருந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண், அவரை கண்டித்தார். ஆனாலும் அவர் கேட்காமல் தொடர்ந்து இவ்வாறு சைகை மூலம் அழைத்து வந்தார்.
இதனால் கோபம் அடைந்த அப்பெண், சேலம் டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். வழக்கு பதிவு செய்த போலீசார், ரமேசை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Tags
Next Story
