பரிவார தெய்வங்களுடன் படைவெட்டி மாரியம்மன் வீதியுலா

பரிவார தெய்வங்களுடன் படைவெட்டி மாரியம்மன் வீதியுலா

ஆட்டுக்கிடா வாகனத்தில் முன்னுடையான்

மயிலாடுதுறை அருகே கஞ்சா நகரம் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ படைவெட்டி மாரியம்மன் ஆலய கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு ஸ்ரீ படைவெட்டி மாரியம்மன் பரிவார தெய்வங்களுடன் நடைபெற்ற வீதியுலா காட்சியில் பொதுமக்கள் வீடுகள் தோறும் தீபாரதனை எடுத்து வழிபாடு நடத்தினர்
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா கஞ்சாநகரம் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ படைவெட்டி மாரியம்மன் ஆலய கும்பாபிஷேகம் நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இரவு ஸ்ரீ படைவெட்டி மாரியம்மன் பரிவார தெய்வங்ககளுடன் வீதியுலா காட்சி நடைபெற்றது. மின்னொளியால் அலங்கரிக்கப்பட்ட படிசட்டத்தில் ஸ்ரீ படைவெட்டி மாரியம்மனும், ஆட்டுக்கிடா வாகனத்தில் முன்னுடையான், மற்றும் காத்தவராயன் சுவாமிகள் தனி தனியாக எழுந்தருளி நடைபெற்ற வீதியுலாவில் பொதுமக்கள் வீடுகள் தோறும் தீபாரதனை எடுத்து வழிபாடு நடத்தினர்.

Tags

Next Story