பட்டா மாற்றம் தொடர்பாக விஏஓ வூக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக புகார்

பட்டா மாற்றம் தொடர்பாக விஏஓ வூக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக புகார்

விஏஓவுக்கு கொலை மிரட்டல் என புகார்

விஏஓ வை பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்த புகாரில் வழக்குப்பதிவு

மயிலாடுதுறை டவுன் ஸ்டேஷன் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருபவர் மணிகண்டன் (30). சம்பவ தினத்தன்று அதே பகுதியை சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்று உட்பிரிவு பட்டா மாற்றம் தாமதம் குறித்து கடுமையாக பேசியுள்ளார். பட்டா மாற்றம் குறித்து சர்வேயரை பார்க்கச் சொன்னதால் கோபப்பட்ட ஸ்ரீதர், விஏஓ மணிகண்டனை பார்த்து திட்டியதுடன், கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டன் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தது உட்பட நான்கு சட்டப் பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் மாயமான ஸ்ரீதரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags

Next Story