மீனாட்சி இராமசாம கல்லூரியில் உயர் கல்விக்கான வழிகாட்டு நிகழ்ச்சி

மீனாட்சி இராமசாம கல்லூரியில் உயர் கல்விக்கான வழிகாட்டு நிகழ்ச்சி

வழிகாட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் 

அரியலூர் அருகே தத்தனூர் மீனாட்சி இராமசாம கல்லூரியில் உயர் கல்விக்கான வழிகாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அடுத்துள்ள தத்தனூர் மீனாட்சி இராமசாமி கல்வி நிறுவனங்கள், கீழப்பழுவூர் மீரா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் ஜெயங்கொண்டம் அன்னை தெரசா நர்சிங் மற்றும் பாரா மெடிக்கல் கல்லூரி சார்பாக பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான உயர் கல்விக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

மீனாட்சி இராமசாமி கல்வி நிறுவனங்களின் தாளாளர் வழக்கறிஞர். M.R. இரகுநாதன், மீனாட்சி இராமசாமி கல்வி நிறுவனங்களின் இயக்குநர்கள் இரா.இராஜமாணிக்கம், முனைவர் வை.தியாகராஜன் , கீழப்பழுவூர் மீரா மகளிர் கல்லூரி தாளாளர் M.R கமல்பாபு மற்றும் அன்னை தெரசா பாரா மெடிக்கல் கல்லூரியின் தாளாளர்,

முத்துகுமரன், மீனாட்சி இராமசாமி பொறியியல் கல்லூரியின் நிர்வாக இயக்குநர் முனைவர். க.செந்தில் குமரன் மற்றும் முதல்வர் முனைவர் ந.மதியழகன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். மேல்நிலை கல்விக்குப் பிறகு மாணவர்கள் என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம் எந்தெந்த துறைகளை தேர்வு செய்யலாம் என்ற விரிவான விளக்கங்களை பேராசிரியர்கள் வழங்கினர்.இந்நிகழ்வில் 10&12 ம் ஆண்டு முடித்த பல மாணவ மாணவிகளும் அவர்களது பெற்றோர்களும் ஆசிரிய பெருமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இதில் மாணவ மாணவியர்களின் சந்தேகங்களை போக்கும் விதமாக பேராசிரியர்கள் தனித்தனியான அரங்குகளை அமைத்திருந்தனர் ஒவ்வொரு அரங்கிலும் மேற்படிப்புக்கான பாடப்பிரிவுகள் மற்றும் அதன் வாயிலாக எந்தெந்த வேலைக்கு செல்ல இயலும் என்பன குறித்த துண்டு பிரசுரங்கள் மற்றும் இக்கல்லூரியில் பயின்று அரசு மற்றும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் முன்னாள் மாணவர்கள் குறித்த விபரங்களும் இடம்பெற்றிருந்தன, இதனை வருகை புரிந்த அனைத்து மாணவ மாணவிகளும் ஆர்வமுடன் தெரிந்து கொண்டனர்.. முன்னதாக இந்நிகழ்வில் மீனாட்சி இராமசாமி பொறியியல் கல்லூரியின் முதல்வர் வரவேற்புரையாற்றினார். விழாவில் பங்குபெற்ற மாணவர்களை வரவேற்று பேசிய தாளாளர் கூறியதாவது வாழ்க்கையின் தேவைகளாக கல்வியும் உழைப்பும் வெற்றியை தீர்மாணிக்கும் என்று தொடங்கி பல கல்வியாளர்களின் வாழ்வையும் அவர்களின் படித்தல் திறனையும் சிறப்பாக குறிப்பிட்டார். கல்வியின் அவசியம் மற்றும் முன்னேற்றம், மாணவர்கள் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் மற்றும் நீங்கள் வளர்த்துகொண்ட அறிவுதிறமையை செயலாக மாற்றுங்கள்.

பெண் கல்வியின் அவசியம் பெண்கள் வேலைக்கு செல்லுதல் பெண்கள் ஏன் படிக்க வேண்டும் போன்ற பெண்ணிய கருத்துக்களை மிகச் சிறப்பாக குறிப்பிட்டார். மாணவர்கள் பத்தாம் வகுப்பு முடித்து பதினொன்றாம் வகுப்பு பாடப்பிரிவை தேர்ந்தெடுக்கும் போது மிகுந்த கவனத்துடன் தேர்வு செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார் இயக்குனர் முனைவர். வை.தியாகராஜன் நல்ல ஆளுமைமிக்க மனப்பான்மையை வளர்த்துகொள்ளுங்கள் என தொடங்கி பல்வேறு நுழைவுத் தேர்வுகளை அறிமுகப்படுத்தி பேசிய இயக்குனர் அவர்கள் தமிழகத்திலும்,

இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் பொறியியல் கல்வியின் அவசியம் குறித்தும் வேலைவாய்ப்பு குறித்தும் மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம் உரையாற்றினார். மேலும் உங்கள் திறமைகளை சிறப்பாக பயன்படுத்துங்கள். என்று குறிப்பிட்டார். இந்நிகழ்வில் திரளான மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட10 மற்றும் 12 வகுப்பு முடித்த மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்களுக்கு சிறப்பு விருந்து வழங்கப்பட்டது, மாணவர்கள் தங்கு தடை இன்றி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அரியலூர் மாவட்டம் முழுவதும் கல்லூரி பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது,

இந்நிகழ்வில் கலந்து கொண்ட பள்ளி மாணவ மாணவிகளிடம் கேட்டறிந்த போது ஏழை எளிய மக்கள் எளிதாக கல்வி கற்க மீனாட்சி ராமசாமி கல்வி நிறுவனம் இயங்கி வருவதை பெருமையாக கருதுகிறோம் மேலும் பின் தங்கிய மாவட்டமாக இருந்து வரும் அரியலூர் மாவட்டத்தில் இதுபோன்ற நிகழ்ச்சியை நடத்தி எங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய தாளாளர் ஐயா ரகுநாதன் அவர்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்

மேலும் இக்கல்லூரியில் பயின்று பல அரசு துறைகளில் ஆட்சி செய்து வரும் அரசு அதிகாரிகளை போல் நாங்களும் இக்கல்லூரியில் பயின்று கல்லூரிக்கு பெருமை சேர்ப்பது எங்களது கடமையாக கருதுகிறோம் என்பதாக தெரிவித்தனர். நிகழ்ச்சியை மீனாட்சி இராமசாமி கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள் துணை முதல்வர் துறை தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் ஒருங்கிணைத்தனர் இந்நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் மீனாட்சி இராமசாமி பொறியியல் கல்லூரியின் துணை முதல்வர் பேராசிரியர் அரிவசந்த் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்...

Tags

Next Story