தக்கலையில் அதிமுக (ஓ பி எஸ் அணி) சார்பில் எம் ஜி ஆர் பிறந்த தினம் 

தக்கலையில் அதிமுக (ஓ பி எஸ் அணி)  சார்பில் எம் ஜி ஆர் பிறந்த தினம் 
தக்கலை எம் ஜி ஆர் சிலைக்கு மாலை அணிவித்த ஒ பி எஸ் அணியினர்
கன்னியாகுமரி மாவட்டம், தக்கலையில் ஓபிஎஸ் அணியினர் எம் ஜி ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

கன்னியாகுமரி மேற்கு மாவட்ட அ தி மு க (ஓ பி எஸ் அணி) சார்பில், டாக்டர் எம்.ஜி.ஆர் 107 - வது பிறந்த நாள் விழா தக்கலையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் பி. டி. செல்லப்பன் தலைமையில் எம் ஜி ஆர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

நிகழ்வில் மாவட்ட அவை தலைவர் கே. வி சந்திரசேகர், பத்மனாபபுரம் நகர செயலாளர் டேனியல், மாநில இலக்கிய அணி இணை செயலாளர் ச.வீரவேணாடன் ராஜா, மாவட்ட பொருளாளர் பில்மோர் ராபட், முன்னாள் மாவட்ட செயலாளர் டாக்டர் தங்கமணி, ஒன்றிய செயலாளர்கள் முருகன், வழக்கறிஞர் சிவகுமார், ராஜேஷ், ஆசிரியர். ரெத்தினசாமி, கிள்ளியூர் ஆசீர் சேம் ராஜ், தொகுதி செயலாளர் குமார தாஸ், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் சாந்தகுமார், மாவட்ட சிறுபாண்மை பிரிவு செயலாளர் ஜகபர், மாவட்ட மகளிர் அணி செயலாளர் சுஜாதா கோபால், மகளிர் அணி துணைச் செயலாளர் விஜிலா பிரான்சிஸ், மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய கழக நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் மற்றும் சார்பு அணி அமைப்பினர் , மகளிர் அணி நிர்வாகிகள், மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர் .

Tags

Next Story