ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் அமைச்சர் ஆய்வு

காமராஜபுரம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் காலை உணவுத் திட்டம் குறித்து, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு செய்தார்.
செங்கல்பட்டு மாவட்டம்,கூடுவாஞ்சேரி அடுத்த நந்திவரம் பகுதியில் அமைந்துள்ள காமராஜபுரம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விரிவான ஆய்வு மேற்கொண்டு முதலமைச்சர் காலை உணவுத் திட்ட செயலாக்கத்தையும் பார்வையிட்டார். அப்பள்ளியில் செயல்படும் முதலமைச்சர் காலை உணவு திட்ட உணவு தயாரிப்பு மையத்தினையும் பார்வையிட்டார். அதனை தொடர்ந்து மாணவ, மாணவிகளை சந்தித்த அமைச்சர், மாணவர்களின் கல்வி கற்கும் திறன், பாடல், திருக்குறள், ஆங்கில பாடல் பாடச்சொல்லி அதனை கேட்டு மகிழ்ந்து மாணவச்செல்வங்களை பாரட்டினார். மேலும் பள்ளி வளாகத்தை தூய்மையாக பராமரிக்கும் ஆசிரியர்களுக்கும் மாணவச் செல்வங்களுக்கும் சுகாதாரப் பணியாளர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.
Next Story